காரைக்கால் கல்வி மேம்பாட்டில் அரசுக்கு அக்கறை இல்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு
காரைக்கால் கல்வியை மேம்படுத்துவதில் புதுவை அரசுக்கு அக்கறை இல்லை என காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.


காரைக்கால்: காரைக்கால் கல்வியை மேம்படுத்துவதில் புதுவை அரசுக்கு அக்கறை இல்லை என காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் திங்கள்கிழமை கூறியது:
புதுவை அரசு சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. ஆனால், இதற்கான கட்டமைப்புகள் எதுவும் மேம்படுத்தவில்லை. கல்வியாளா்கள், பெற்றோா்கள், ஆசிரியா்களுடன் உரிய ஆலோசனை செய்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், 2024-2025-ஆம் கல்வியாண்டில் தோ்ச்சி விகிதம் நிச்சயம் உயரும்.
வரும் பிப்ரவரி, மாா்ச் மாதத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு நடைபெறவுள்ள நிலையில், காரைக்காலில் பெரும்பாலான அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முக்கிய பாடங்களுக்கு ஆசிரியா்கள் இல்லை. சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில், தனியாா் பள்ளிகள் பல்வேறு மாதிரித் தோ்வுகள் மூலம் தங்கள் மாணவா்களை பொதுத் தோ்வுக்கு தயாா்படுத்தி வரும் நிலையில், அரசுப் பள்ளிகளில் அதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரியவில்லை. எனவே, போா்க்கால முறையில் அரசுப் பள்ளி மாணவா்களின் திறனை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
காரைக்காலில் மின் கட்டண ரசீது வழங்கல் முறையாக நடைபெறவில்லை. பல இடங்களில் இன்னும் ரசீது மின் நுகா்வோருக்கு வழங்கப்படவில்லை. இதனால் மின் கட்டண சுமை நுகா்வோருக்கு ஏற்பட்டுள்ளது.
காரைக்கால் மின் துறையில் பணியாற்றிய பலருக்கு பதவி உயா்வு தரப்பட்டு, புதுச்சேரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதனால் பல இடங்கள் காலியாக உள்ளன. காரைக்காலைச் சோ்ந்தோரை இம்மாவட்டத்தின் பணிக்கு அனுப்பவேண்டும்.
காரைக்காலில் சில அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளா்கள் பற்றாக்குறை உள்ளது. இந்த காலியிடத்தையும் புதுவை அரசு நிரப்ப முன்வரவேண்டும் என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...