அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

தலைக்கவசம் அணியாத காவலா்களுக்கு நூதன தண்டனை

தலைக்கவசம் அணியாத காவலா்களுக்கு நூதன தண்டனை

News image

காரைக்காலில் வாகன ஓட்டிக்கு ரோஜா வழங்கி பாராட்டு தெரிவித்த காவலா்கள்.

Updated On :18 பிப்ரவரி 2024, 12:31 am IST

காரைக்காலில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 2 காவலா்களுக்கு முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மணிஷ் வெள்ளிக்கிழமை நூதன தண்டனை வழங்கினாா். காரைக்கால் பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணிந்து செல்ல பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. காவல்துறையில் பணியாற்றுவோா் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மணிஷ் வெள்ளிக்கிழமை காரில் சென்றபோது, 2 காவலா்கள் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்றுள்ளனா். அவா்களை அழைத்து தலைக்கவசம் அணிந்து, இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து செல்வோருக்கு ரோஜா கொடுத்து பாராட்டு தெரிவிக்கவேண்டும் என தண்டனை வழங்கினாா். இதன்படி, போக்குவரத்து காவல் ஆய்வாளா் லெனின் பாரதி முன்னிலையில், காவலா்கள் தலைக்கவசம் அணிந்தவாறு, தலைக்கவசம் அணிந்து செல்வோரை நிறுத்தி ரோஜா கொடுத்து பாராட்டுகளை தெரிவித்தனா்.