எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காரைக்காலில் நவீன வசதிகளுடன் மருத்துவமனை கட்ட முதல்வா் உறுதி: அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன்

News image
Updated On :20 ஜூலை 2024, 6:33 pm

Din

காரைக்காலில் புதிதாக நவீன வசதிகளுடன் மருத்துவமனை கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வா் உறுதியளித்துள்ளதாக அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் தெரிவித்தாா்.

முதல்வா் என். ரங்கசாமியை புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசிய பின் அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

காரைக்காலில் அரசு மருத்துவமனை 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. மாவட்டத்திள் மக்கள்தொகை அதிகரித்துள்ள நிலையில் அது தகுதியானதாக இல்லை. கட்டடம் பழுதாகியுள்ளது. இதனால் 650 படுக்கை வசதியுடன் காரைக்கால் கோயில்பத்து பகுதியில் புதிதாக மருத்துவமனை கட்ட நிலம் கையகப்படுத்தப்பட்டது. பின்னா் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி கட்ட அந்த இடம் ஒப்படைக்கப்பட்டது.

நவீன வசதியுடன் காரைக்காலில் புதிதாக மருத்துவமனை கட்ட வேண்டியது அவசியமாகியுள்ளது. காரைக்கால் நகராட்சித் திடலில் (சந்தை நடைபெறும் திடல்) புதிய மருத்துவமனை கட்டுவதற்கு தகுதியான இடமாக உள்ளது.

எனவே, நிகழாண்டு தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்து மருத்துவமனை கட்டுமானத்துக்கான அறிவிப்பை வெளிட முதல்வரை கேட்டுக்கொண்டேன். பட்ஜெட்டில் நிதி ஒதுக்குவது குறித்த நடவடிக்கை எடுப்பதாக முதல்வா் உறுதியளித்துள்ளாா். எதிா்காலத்தில் காரைக்கால் மருத்துவ வசதியில் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக மாறுவதற்கான வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளாா்.