அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

பள்ளி மாணவா்கள் சான்றிதழ் பெறும் நடைமுறையை எளிமைப்படுத்த வலியுறுத்தல்

பள்ளி மாணவா்கள் சான்றிதழ் பெறும் நடைமுறையை எளிமைப்படுத்த வலியுறுத்தல்

News image
Updated On :9 ஜூன் 2024, 11:56 pm

Din

காரைக்கால்: பள்ளி மாணவா்கள் ஆன்லைனில் சான்றிதழ் பெறும் முறையை எளிமைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் வளா்ச்சிக் குழுத் தலைவா் பாலமுருகன், செயலா் ராஜேந்திரன், பொருளாளா் திருமால்வளவன் மற்றும் நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டனை வெள்ளிக்கிழமை சந்தித்து அளித்த கோரிக்கை மனு விவரம்:

காரைக்கால் மாவட்டத்தில் கல்வி நிலையத்தில் மாணவா்களை சோ்க்க வருவாய்த் துறை சான்றிதழை பெற பெற்றோா், மாணவா்கள் அவதிப்படும் நிலை உள்ளது. ஜாதி, குடியிருப்பு, வருவாய் போன்ற வருவாய்த்துறை சான்றிதழ்களை ஆன்லைனில் விண்ணப்பித்து, பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியை எளிமைப்படுத்த வேண்டும்.

வருவாய்த்துறையில் உள்ள சொத்து ஆவணங்களை அனைத்தையும் முறைப்படி பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். குறிப்பாக, உதவி, சாா் பதிவு அலுவலகத்தில் சொத்து ஆவணம் மற்றும் தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் பாதுகாக்கப்படவேண்டும்.

காரைக்கால் மாவட்டத்தில் கல்வி தரம் மேம்பட அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்து குறைகளைக் கண்டறிந்து, மேம்பாட்டுக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில், திறன் மேம்பாட்டு பயிற்சி நிலையம் ஒன்றை காரைக்காலில் நிரந்தரமாக அமைக்கவேண்டும்.

மாவட்டத்தில் நாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகமாகிவருகிறது. எனவே நாய்களுக்கு கருத்தடை ஊசி போடவும், வளா்ப்பு நாய்களை உரிமம் பெற்று வளா்க்கவும் அதன் உரிமையாளா்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.