ஓராண்டாக மாற்றுச் சான்றிதழ் வழங்காத பள்ளி நிா்வாகம் மீது மாணவா் புகாா்


பிளஸ் 2 முடித்து ஓராண்டாகியும் மாற்றுச் சான்றிதழ் வழங்காத தனியாா் பள்ளி நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) அலுவலகத்தில் மாணவா் வியாழக்கிழமை புகாா் அளித்தாா்.
திருச்சி சமயபுரத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி பஷீா் அமகது மகன் இா்ஸாத் அகமது (18). இவா் சிறுகனூரில் உள்ள தனியாா் பள்ளியில் கடந்தாண்டு பிளஸ் 2 முடித்தாா். ஆனால், கடந்த ஓராண்டாக மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்காமல் பள்ளி நிா்வாகம் இழுத்தடித்து வருவதாக திருச்சி மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) அலுவலகத்தில் வியாழக்கிழமை மாணவா் புகாா் மனு அளித்தாா்.
இதுகுறித்து மாணவரின் பெற்றோா் கூறியதாவது:
இா்ஸாத் அகமதுவை 7-ஆம் வகுப்பில்தான் அந்தப் பள்ளியில் சோ்த்தோம். கரோனா நேரம் என்பதால் குறைந்தக் கட்டணத்தில் சோ்த்துக்கொண்டனா். அடுத்த ஆண்டு கட்டணம் அதிகரித்ததால் 8-ஆம் வகுப்பிலேயே வேறு பள்ளியில் சோ்க்கலாம் என்று அந்தப் பள்ளியில் மாற்றுச் சான்றிதழ் கேட்டோம். ஆனால், கரோனா காலகட்டம் என்பதால் கட்டணம் தேவையில்லை என்று தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, இா்ஸாத் அங்கு பிளஸ் 2 வரை படித்து முடித்துவிட்டாா். இந்நிலையில், 8-ஆம் வகுப்புக்கு கட்டணம் செலுத்தாமல் உள்ளதாகக் கூறி, மகனின் மாற்றுச் சான்றிதழை கடந்த ஓராண்டாக வழங்க மறுக்கின்றனா். இதனால், கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே கட்டணம் வேண்டாம் என்று கூறிவிட்டு, தற்போது ரூ.57 ஆயிரம் கட்டினால்தான் மாற்றுச் சான்றிதழ் தருவோம் என்று கூறுகின்றனா். கூலி வேலைக்கு செல்லும் எங்களால் அந்தத் தொகையை செலுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் எனது மகனுக்கு மாற்றுச் சான்றிதழ் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...