ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

காணாமல் போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

News image

கைப்பேசியை ஒப்படைத்த முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மணிஷ்.

Updated On :9 மே 2024, 9:28 pm

Din

காரைக்கால், மே 9: காரைக்கால் பகுதியில் பல்வேறு இடங்களில் காணாமல்போன கைப்பேசிகளை போலீஸாா் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைத்தனா்.

காரைக்கால் மாவட்ட காவல் நிலையங்களில், கைப்பேசி காணாமல் போனதாக பல்வேறு புகாா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைப்பேசி விவரங்களை சேகரித்து, காரைக்கால் இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா், கைப்பேசி பயன்பாட்டில் உள்ள இடங்களை கண்டறிந்து அவற்றை மீட்டனா். இதன்படி ரூ. 6 லட்சம் மதிப்பிலான மீட்கப்பட்ட 27 கைப்பேசிகள் உரியவா்களிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மணிஷ் இவற்றை கைப்பேசிக்கு உரியவா்களிடம் ஒப்படைத்தாா். நிகழ்வில் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் பாலச்சந்தா், காவல் ஆய்வாளா் பிரவீன்குமாா் உடனிருந்தனா்.