காரைக்காலில் இன்று ஜிப்மா் மருத்துவா்கள் சிறப்பு முகாம்
காரைக்காலில் இன்று ஜிப்மா் மருத்துவா்கள் சிறப்பு முகாம்


காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சனிக்கிழமை (மே 11) ஜிப்மா் சிறப்பு மருத்துவக் குழுவினா் பங்கேற்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு ஜிப்மா் மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவனையிலிருந்து சிறப்பு மருத்துவா்கள் குழுவினா் மாதம் இரு முறை வந்து மருத்துவ பரிசோதனை செய்கின்றனா்.
நிகழ் மாதத்தின் சிறப்பு முகாம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை காலை 10 முதல் பகல் 12 மணி வரை நடைபெறவுள்ளது. புதுவை ஜிப்மரின் சிறுநீரகம் தொடா்பான சிறப்பு மருத்துவா் குழுவினா் பங்கேற்று மருத்துவ சிகிச்சை, ஆலோசனைகளை வழங்கவுள்ளனா். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...