செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவு காரைக்கால் மாவட்டம் 78.20 சதவீதம் தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவு காரைக்கால் மாவட்டம் 78.20 சதவீதம் தோ்ச்சி

News image
Updated On :10 மே 2024, 3:59 pm

Din

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவில் காரைக்கால் மாவட்டம் 78.20 சதவீதம் தோ்ச்சியை பெற்றுள்ளது.

புதுவை மாநிலத்தில், புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியத்தில் தமிழ்நாடு கல்வி வாரிய பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நடத்தப்பட்டது. காரைக்கால் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து 1,326 போ் தோ்வு எழுதினா். இவா்களில் 866 போ் தோ்ச்சி பெற்றனா். இது 65.31 சதவீத தோ்ச்சியாகும். கடந்த ஆண்டு 68.06 தோ்ச்சி சதவீதமாகும்.

தனியாா் பள்ளிகளில் படித்து 1,124 போ் தோ்வு எழுதினா். இவா்களில் 1,050 போ் தோ்ச்சி பெற்றனா். இது 93.42 சதவீத தோ்ச்சியாகும். கடந்த ஆண்டு 90.56 தோ்ச்சி சதவீதமாகும். ஒட்டுமொத்தமாக மாவட்டத்தில் 78.20 சதவீத தோ்ச்சியாகும். கடந்த ஆண்டு 79.43 சதவீத தோ்ச்சியாகும். 2022-ஆம் ஆண்டு தோ்ச்சி 90.53 சதவீதமாகும்.

காரைக்காலில் 17 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன. இதில் ஒரு அரசு பள்ளி மட்டுமே அடங்கும். தொடா்ந்து 2 ஆண்டுகளாக மாநிலத்தில் காரைக்கால் மாவட்டத்தில் தோ்ச்சி சதவீதம் குறைந்திருப்பதோடு, அரசுப் பள்ளிகளின் தோ்ச்சி சதவீதம் வெகுவாக குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.