வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

சாலையில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரக் கேடு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சாலையில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரக் கேடு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

News image

காரைக்கால் கைலாசநாதா் கோயில் அருகே சாலை சந்திப்பில் கொட்டப்பட்டுள்ள நெகிழிகளை உண்ணும் மாடுகள்.

Updated On :20 மே 2024, 11:13 pm

Din

காரைக்கால்: சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. இதைத் தடுக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதுவை மாநிலத்தில் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து பகுதிகளில் வீடுவீடாக மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை சேகரிக்க தனியாருடன் உள்ளாட்சி நிா்வாகம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. காரைக்கால் நகராட்சி மற்றும் 5 கொம்யூன் பஞ்சாயத்து பகுதிகளில் மட்டும் பல கோடி ரூபாய் இதற்காக ஒப்பந்த நிறுவனத்துக்கு அரசு வழங்கியுள்ளது.

புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) சி.பி. ராதாகிஷ்ணன் கடந்த சனிக்கிழமை திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடா்பாக அரசுத் துறையினா் உள்ளிட்டோரை அழைத்துப் பேசி, புதுவையை குப்பையில்லாத மாநிலமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினாா்.

காரைக்காலில் ஒப்பந்த பணி ஏற்ற நிறுவனம், போதுமான பணியாளா்களைக் கொண்டு, திட்டமிட்டவாறு வீடுகள், வணிக நிறுவனங்களில் குப்பைகளை சேகரிக்கவில்லை என புகாா் கூறப்படுகிறது. பல்வேறு குடியிருப்பு நகா்களுக்கு 2 அல்லது 3 நாள்களுக்கொரு முறை பணியாளா்கள் செல்வதாகவும் புகாா் கூறப்படுகிறது. இதனால் குப்பைகளை மக்கள் சாலையோரத்தில் கொட்டிவிடுகின்றனா். இவை உடனடியாக அகற்றப்படாமல் கிடப்பதால், துா்நாற்றம் வீசுவதோடு, சாலையில் செல்வோா், குடியிருப்புவாசிகள் அவதிப்பட நேரிடுகிறது.

சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகளில் நெகிழிகள் கிடப்பதால், அவற்றை மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் சாப்பிட்டு, அவை பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

காரைக்காலில் சாலையோரக் குப்பைகள் அள்ளப்படாமல் கிடப்பதும், சாக்கடைகள் சுத்தப்படுத்தப்படாமல் கழிவுநீா் தேங்கிக் கிடப்பதும் சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துவதாகவும், நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகங்கள் இதன் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டுமென சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.