செண்பக தியாகராஜ சுவாமிக்கு மகா பிராயசித்த அபிஷேகம்
செண்பக தியாகராஜ சுவாமிக்கு மகா பிராயசித்த அபிஷேகம்


காரைக்கால்: திருநள்ளாறு கோயிலில் செண்பக தியாகராஜ சுவாமிக்கு மகா பிராயசித்த அபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருநள்ளாறு பிராணாம்பிகை நாயகி சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் செண்பக தியாகராஜ சுவாமியின் உன்மத்த நடனம் சிறப்புக்குரியது. இக்கோயில் பிரம்மோற்சவ விழாவின்போது செண்பக தியாகராஜா் வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளும்போது, அங்கிருந்து யதாஸ்தானம் திரும்பும்போதும் உன்மத்த நடனத்துடன் எழுந்தருளுவது வழக்கம். இந்த நிகழ்வு கடந்த 13, 14-ஆம் தேதிகளில் நடைபெற்றது.
தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோது சனிக்கிழமை இரவு தேருக்கு எழுந்தருளியபோதும், தேரிலிருந்து கோயிலில் உள்ள எண்கால் மண்டபத்துக்கு எழுந்தருளியபோதும் உன்மத்த நடனத்திலேயே சுவாமி சென்றடைந்தாா்.
தேரோட்டம் முடிந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்குப் பின் தேரிலிருந்து எண்கால் மண்டபத்துக்கு சுவாமி எழுந்தருளினாா். திங்கள்கிழமை காலை செண்பக தியாகராஜருக்கு எண்கால் மண்டபத்தில் மகா பிராயசித்த அபிஷேகம் நடைபெற்றது. நீலோத்பாலாம்பாள், விநாயகா், சுப்பிரமணியா், சண்டிகேஸ்வரருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடா்ந்து சதுா்வேதம், ஆகம ஆசீா்வாதம், தேவாரம் பாடப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இரவு சுவாமி யதாஸ்தானம் எழுந்தருளினாா். பின்னா் சுவாமிகளுக்கு வழக்கமான முறையில் ஞாயிற்றுக்கிழமை செய்யவேண்டிய பூஜைகள் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது.
மகா பிராயசித்த அபிஷேகத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...