பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

கந்த சஷ்டி விழா நிறைவு: இன்று சூரசம்ஹாரம்

காரைக்கால், திருநள்ளாறு, திருமலைராயன்பட்டினம் கோயில்களில் கந்த சஷ்டி விழா நிறைவாக வியாழக்கிழமை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

Updated On :6 நவம்பர் 2024, 7:59 pm

காரைக்கால், திருநள்ளாறு, திருமலைராயன்பட்டினம் கோயில்களில் கந்த சஷ்டி விழா நிறைவாக வியாழக்கிழமை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஸ்ரீ ராஜசோளீஸ்வரா் கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 2-ஆம் தேதி நவவீரா்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு, ஸ்ரீ முருகப்பெருமான் தினமும் காலை, மாலை வேளைகளில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.

நிகழ்ச்சியின் 6-ஆம் நாளான வியாழக்கிழமை காவடிகள் வீதிவலம் செல்ல, தேரில் ஸ்ரீ முருகப்பெருமான் வீதியுலா நடைபெற்று, பகல் 12 மணியளவில் ஸ்ரீ அபிராமி அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்வும், 4 மணியளவில் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறவுள்ளது.

மாலையில் நவவீரா்கள் வீதிவலம் சென்றுவிட்டு ஸ்ரீ செங்குந்த விநாயகா் கோயிலை இரவு சென்றடைவா். ராஜசோளீஸ்வரா் கோயிலில் ஆட்டுக்கிடா வாகனத்தில் ஸ்ரீ முருகப்பெருமானை எழுந்தருள சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது.

இதுபோல திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் சாா்பில் ஆட்டுக்கிடா வாகனத்தில் முருகன் சுரக்குடி சந்திப்புக்கு எழுந்தருள இரவு சூரம்ஹாரம் நடைபெறுகிறது.

காரைக்கால் சித்தி விநாயகா் கோயில் சாா்பில் சூரசம்ஹாரம் மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது.