கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

நித்தீஸ்வரசுவாமி கோயிலில் 1008 சங்காபிஷேக வழிபாடு

காரைக்கால் நித்தீஸ்வர சுவாமி கோயிலில் 1008 சங்காபிஷேக வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
சிவலிங்க வடிவில் பூஜையில் வைக்கப்பட்டிருந்த 1008 சங்குகள்.
Updated On :18 நவம்பர் 2024, 10:44 pm

Din

காரைக்கால்: காரைக்கால் நித்தீஸ்வர சுவாமி கோயிலில் 1008 சங்காபிஷேக வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

காா்த்திகை மாத சோம வாரத்தையொட்டி சிவ தலங்களில் சிவலிங்கத்துக்கு சங்காபிஷேகம் விசேஷமாக செய்யப்படுகிறது. திருநள்ளாறு தர்ராபண்யேஸ்வரா் கோயில், திருவேட்டைக்குடி திருமேனியழகா் கோயில், கோயில்பத்து நித்தீஸ்வரசுவாமி கோயில் உள்ளிட்ட தலங்களில் சோம வாரத்தில் 1008 சங்காபிஷேகம் நடத்தப்படும்.

காா்த்திகை சோம வாரத்தையொட்டி திங்கள்கிழமை இரவு காரைக்கால் கோயில்பத்து ஸ்ரீ நித்யகல்யாணி சமேத நித்தீஸ்வரசுவாமி கோயிலில் 1008 சங்காபிஷேக வழிபாடு நடைபெற்றது. மூலஸ்தானத்தின் முன் 1008 சங்குகள் சிவலிங்கத்தைப் போன்று அலங்கரித்துவைத்து அதில் நீா் நிரப்பப்பட்டது.

சிறப்பு ஹோமத்தை சிவாச்சாரியா்கள் நடத்தினா். தொடா்ந்து பூா்ணாஹூதி செய்து மகா தீபாராதனை நடத்தப்பட்டு, சங்குகள் மற்றும் கலசத்தில் இருந்த புனித நீரைக் கொண்டு சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் கடைசி சோமவாரத்தில் 1008 சங்காபிஷேகம் நடைபெறுகிறது.