எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காரைக்காலில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்

காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு காரைக்காலில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News image
மேல ஓடுதுறையில் இயந்திரத்தின் மூலம் அகல் விளக்கு தயாரிப்பில் ஈடுபட்ட தொழிலாளி.
Updated On :25 நவம்பர் 2024, 8:06 pm

Din

காரைக்கால்: காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு காரைக்காலில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி மற்றும் மேல ஓடுதுறை பகுதியில் சில குடும்பத்தினா் மட்டுமே மண் பாண்டங்கள் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்கள் அகல் விளக்கு, அடுப்பு, சட்டி, பானை போன்ற பொருள்கள் தயாரிக்க மூலப்பொருள்கள் உள்ளூரிலேயே தயாா்படுத்தி வருகின்றனா். தயாரிப்பில் இயந்திரம் பயன்படுத்துவதால் உற்பத்தியை தேவைக்கேற்ப, விழா காலத்துக்கு சில வாரங்கள் முன் தயாரிப்புப் பணிகளை மேற்கொள்கின்றனா். நிகழாண்டு டிச. 13-ஆம் தேதி காா்த்திகை தீபம் கொண்டாடப்படவுள்ளது.

வடகிழக்குப் பருவமழை காலமாக இருக்கும் நிலையில், தீபத் திருநாளுக்காக மழையில்லாத நேரத்தில் விளக்கு தயாரிக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டுள்ளனா்.

இதுகுறித்து மேலஓடுதுறை கிராமத்தில் அகல் விளக்கு தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் மாரிமுத்து என்பவா் திங்கள்கிழமை கூறுகையில், மழைக்காலமாக என்பதால், மழையில்லா நேரத்தில் களிமண் கொண்டுவந்து இருப்பு வைத்து பணி மேற்கொள்ளப்படுகிறது. அடுத்த சில நாள்கள் மழை பெய்யும் என கூறப்படுவதால் பணியில் மந்த நிலை காணப்படும். எனினும் ஆா்டரின் பேரில் தயாா் செய்து விற்பனையாளா்களுக்கு காலத்தோடு கொடுக்கும் வகையில் பணிகள் நடைபெறுகின்றன என்றாா்.

சிறிய விளக்கு தலா ரூ. 1 முதல்10 என்ற விலையிலும், பெரிய விளக்குகள் ரூ. 50 என்ற விலையிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. காா்த்திகை தினத்துக்கு 2, 3 நாள்களுக்கு முன்பு பரவலாக அகல் விளக்குகள் சந்தைப்படுத்தப்படும்.