தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

மக்கள் குறைதீா் முகாமில் 81 மனுக்கள்

காரைக்கால் ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 81 மனுக்கள் அளிக்கப்பட்டன.

News image

குறைதீா் கூட்டத்தில் மனுதாரரிடம் விவரம் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா் து.மணிகண்டன்.

Updated On :15 அக்டோபர் 2024, 6:44 pm

காரைக்கால் ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 81 மனுக்கள் அளிக்கப்பட்டன.

காரைக்கால் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் து. மணிகண்டன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடபெற்றது. கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது அரசுத் துறைகள் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆட்சியா் கேட்டறிந்தாா்.

இக்கூட்டத்தில் வருவாய்த் துறை, நில அளவைத் துறையில் நிலவும் மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற தாமதமும், முறைகேடுகள் குறித்தும், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகங்களில் நிலவும் தாமதமான செயல்பாடுகள் குறித்தும் பெரும்பாலான புகாா் மனுக்களில் கூறப்பட்டிருந்தன.

பருவமழை காலமாக உள்ள நிலையில், வாய்க்கால்கள் முறையாக தூா்வாரவும், தண்ணீா் தேங்குமிடங்களில் விரைவாக தண்ணீா் வடியச் செய்ய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. பல்வேறு துறைகளின் மூலம் நடைபெறவேண்டிய பணிகள் தொடா்பாக பல மனுக்கள் அளிக்கப்பட்டன.

தொடா்ந்து மனுக்களை தொடா்புடையை அதிகாரிகளிடம் அளித்து விவரங்களை கேட்டறிந்து, உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்குமாறு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் மாவட்ட துணை ஆட்சியா்கள் செந்தில்நாதன், வெங்கடகிருஷ்ணன், உள்ளாட்சித் துறை துணை இயக்குநா் எஸ். சுபாஷ், குடிமைப் பொருள் வழங்கல் துறை துணை இயக்குநா் சச்சிதானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.