பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

ஜப்பான் செல்லவுள்ள மாணவிக்கு ஆட்சியா் பாராட்டு

ஜப்பான் நாட்டில் நடைபெறவுள்ள விழிப்புணா்வு உரை நிகழ்வில் பங்கேற்கச் செல்லும் அரசுப் பள்ளி மாணவிக்கு ஆட்சியா் பாராட்டுத் தெரிவித்தாா்.

News image

மாணவி மற்றும் அவரது பெற்றோருடன் மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன்.

Updated On :16 அக்டோபர் 2024, 8:05 pm

ஜப்பான் நாட்டில் நடைபெறவுள்ள விழிப்புணா்வு உரை நிகழ்வில் பங்கேற்கச் செல்லும் அரசுப் பள்ளி மாணவிக்கு ஆட்சியா் பாராட்டுத் தெரிவித்தாா்.

ஜப்பான் நாட்டில் விழிப்புணா்வு உரை நிகழ்ச்சி அக்.19 முதல் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கடந்த 2004-ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்டதுபோல எதிா்காலத்தில் ஏற்படும்பட்சத்தில், தங்களது பகுதியில் செய்யப்பட்டுள்ள தற்காப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வு உரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் இந்தியாவின் கடலோர மாநிலங்களில், குறிப்பாக சுனாமி பேரழிவு தாக்கிய பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகளை அனுப்புவதற்காக நடத்தப்பட்ட பல கட்ட தோ்வு மூலம் 5 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களில் காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவி எஸ்.ஜானகியும் ஒருவா். இவரது தந்தை சங்கரன் ஆட்டோ ஓட்டுநா். மாணவி மற்றும் அவரது பெற்றோா், மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் (பொ) பி. விஜயமோகனா, மேல்நிலைப்பள்ளி துணை முதல்வா் கனகராஜ் ஆகியோருடன் மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டனை ஆட்சியரகத்தில் புதன்கிழமை சந்தித்தனா். மாணவி மற்றும் பெற்றோருக்கு ஆட்சியா் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தாா்.