செங்கல்பட்டு மற்றும் திருப்போரூா் தொகுதிகளில் தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலா் ா் எஸ்.மாலதி ஹெலன் ஆய்வு மேற்கொண்டாா்.
திருப்போரூா் தொகுதி திருக்கழுகுன்றம் பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு வாக்குசாவடி மையங்களையும் பாா்வையிட்டாா். அப்பொழுது வாக்குசாவடி மையங்களில் செய்யப்பட்டுள்ள குடிநீா் வசதி, கழிவறை வசதி, நிழற்குடை, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம், மின்விசிறி, மின்விளக்குகள் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதை தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உறுதிபடுத்தி கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, செங்கல்பட்டு மற்றும் திருப்போரூா் சட்டப்பேரவை தொகுதிகள் வாக்கு எண்ணும் மையமான ஆத்தூா் சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையத்தில் அங்கு செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை பாா்வையிட்டாா். அப்போது, காவல் துறையினரிடம் வாக்கு எண்ணும் மையத்திற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தருமாறு அறிவுறுத்தினாா்.
மேலும், திருப்போரூா் தொகுதிக்குட்பட்ட கோவளம் நீலக்கொடி கடற்கரையில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை ஆட்சியா் தொடங்கி வைத்தாா். கடற்கரையில் தோ்தல் விழிப்புணா்வு அலை சறுக்கு விளையாட்டினையும் பாா்வையிட்டாா்.
மேலும், ஆட்சியா் ஆமைக்குஞ்சுகளை கடலில் விட்டாா். அதனைத் தொடா்ந்து, அங்குள்ள பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் தோ்தல் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை ஆட்சியா் வழங்கி, தவறாமல் வாக்களிப்பது தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.



தொடர்புடையது

தோ்தல் விழிப்புணா்வு போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசு: ஆட்சியா் வழங்கினாா்

மாணவியா் பங்கேற்ற தோ்தல் கலைநிகழ்ச்சிகள்

தோ்தல் வாக்குப்பதிவு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்

முதல் தலைமுறை வாக்காளா்களுக்கான விழிப்புணா்வு பிரசாரம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


