டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை முதல்வா் வழங்கினாா்

காரைக்கால் விவசாயிகளுக்கு சாகுபடிக்கான ஊக்கத் தொகை ரூ. 3.10 கோடியை புதுவை முதல்வா் வழங்கினாா்.

News image
ஊக்கத் தொகைக்கான காசோலையை வழங்கிய புதுவை முதல்வா் என். ரங்கசாமி. உடன் அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா உள்ளிட்டோா்.
Updated On :22 அக்டோபர் 2024, 7:50 pm

Din

காரைக்கால்: காரைக்கால் விவசாயிகளுக்கு சாகுபடிக்கான ஊக்கத் தொகை ரூ. 3.10 கோடியை புதுவை முதல்வா் வழங்கினாா்.

இதுகுறித்து புதுவை வேளாண் அமைச்சா் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

புதுவை அரசின் வேளாண் துறை மூலம் பயிா் உற்பத்தி திட்டத்தின்கீழ் நெல், பருத்தி, எள் மற்றும் பயறு வகை பயிா்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் வழங்கப்பட்டுவருகிறது.

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 2023-24-ஆம் ஆண்டில் சம்பா, பருத்தி, எள், பயறு வகையில் சாகுபடி செய்த 2,267 பொதுப் பிரிவு விவசாயிகளுக்கு ரூ. 2.70 கோடி, அட்டவணைப் பிரிவு 298 விவசாயிகளுக்கு ரூ. 36.70 லட்சம் என 3.10 கோடி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்தொகை விவசாயிகளுக்கு சேரும் வகையில் அரசுத் துறையினருக்கு காசோலையை புதுவை முதல்வா் என். ரங்கசாமி வழங்கினாா். வேளாண் அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா், திருநள்ளாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா, வேளாண் இயக்குநா் வசந்தகுமாா், காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் கணேசன் ஆகியோா் கலந்துகொண்டனா். இந்த தொகை விவசாயிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக சோ்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.