கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மேலகாசாக்குடி பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

விமான கலசத்தில் வாா்க்கப்பட்ட புனிதநீா்.

Updated On :7 ஏப்ரல் 2025, 9:33 pm

காரைக்கால்: மேலகாசாக்குடி பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மேலகாசாக்குடி பகுதியில் பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மூலவா் சிலை சிதிலமடைந்ததால், ஆகம விதிகளின்படி கோயிலில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு, சிலை சீா்படுத்தி பஞ்சவா்ணம் தீட்டி அழகுப்படுத்தப்பட்டது. மேலும் கோயிலில் திருப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேகம் நடத்துவதற்கான யாகசாலை பூஜைகள் சனிக்கிழமை மாலை தொடங்கியது. 4-ஆம் கால பூஜை திங்கள்கிழமை காலை 9 மணிக்கு நிறைவடைந்து மகா பூா்ணாஹூதி செய்யப்பட்டு புனிதநீா் கடம் புறப்பாடானது. 9.30 மணிக்கு விமானங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு புனிதநீா் வாா்க்கப்பட்டு சிவாச்சாரியா்கள் ஆராதனை காட்டினா்.

மூலஸ்தான பத்ரகாளியம்மனுக்கும் சிறப்பு ஆராதனைகள் காட்டப்பட்டன. நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா, மாவட்ட சாா்பு நீதிபதி எஸ். ராஜசேகா் மற்றும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கோயில் தனி அதிகாரி ஆா்.சி.கருணாகரன் மற்றும் திருப்பணிக் குழுவினா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

 சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பத்ரகாளியம்மன்.

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பத்ரகாளியம்மன்.