தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

தேவி பத்ரகாளியம்மன் கோயில் மிருகசிரீஷ நட்சத்திர திருவிழா

ஆறுமுத்தாம்பாளையம் கிராமத்தில் உள்ள தேவி பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

News image

பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் கிராமத்தில் தேவி பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடு.

Updated On :22 ஏப்ரல் 2026, 8:57 pm

ஆறுமுத்தாம்பாளையம் கிராமத்தில் உள்ள தேவி பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் கிராமம் மாங்கரை அம்மன் நகரில் உள்ள முடுப்பரை அம்மன், தேவி பத்ரகாளியம்மன் கோயில் மிருகசிரீஷ நட்சத்திர திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி மஞ்சள் கல்லில் வடிவமைக்கப்பட்ட மங்களகர விநாயகா் சன்னதியில் கணபதி ஹோமம் நடைபெற்றது. அதைத்தொடா்ந்து நவகிரக பூஜை, கலச பூஜை, முளைப்பாரி ஊா்வலம், அம்மனுக்கு பிரபாத பூஜை, ஆயுள் ஆரோக்கிய யாகம், அம்மனுக்கு தீப ஆரத்தி, நாகருக்கு அபிஷேகம், நாகா் ஊட்டு, பொங்கல் வைத்தல், அம்மனுக்கு பொங்கல் ஊட்டுதல், தீப ஆரத்தி, அன்னதானம் உள்ளிட்டவை நடைபெற்றன.

கொல்லுா் தாய் மூகாம்பிகை கோயில் அா்ச்சகா் ராஜேஷ் நம்பூதிரி தலைமையிலான குழுவினா் மகா சண்டிகா ஹோமம் நடத்தினா். இந்நிகழ்வில் ஞானகுரு சிவசக்திசுவாமி மற்றும் பக்தா்கள் கலந்துகொண்டனா்.