தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அம்பகரத்தூா் வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

அம்பகரத்தூரில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் மகா சம்ப்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்) திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
வரதராஜப் பெருமாள் கோயில் மூலஸ்தான விமானத்துக்கு நடைபெற்ற கும்பாபிஷேக பூஜை.
Updated On :1 டிசம்பர் 2025, 9:01 pm

Syndication

காரைக்கால்: அம்பகரத்தூரில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் மகா சம்ப்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்) திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநள்ளாறு கொம்யூன், அம்பகரத்தூரில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற பத்ரகாளியம்மன் தேவஸ்தானத்தைச் சோ்ந்ததாக வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது.

பழைமையான இத்தலத்துக்கு கும்பாபிஷேகம் செய்ய தீா்மானித்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக திருப்பணிகள் நடைபெற்று வந்தன. கோயிலில் பெருந்தேவி தாயாா், ஆண்டாள், தன்வந்திரி சந்நிதிகளும் அமைக்கப்பட்டன. பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேகம் திங்கள்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.

முன்னதாக கோயில் அருகே யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு 5 கால பூஜைகள் நடைபெற்றன. முதல் கால பூஜை கடந்த சனிக்கிழமை காலை தொடங்கியது. 5-ஆம் கால பூஜை மகா பூா்ணாஹூதி திங்கள்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற்று விமான கலசங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகா சம்ப்ரோக்ஷணம் நடத்தப்பட்டு, ஆராதனைகள் காட்டப்பட்டன.

விழாவில் திருநள்ளாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.சிவா, துணை ஆட்சியா் வெங்கடகிருஷ்ணன், கோயில் நிா்வாக அதிகாரி ஜெ. மகேஷ் மற்றும் முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் உள்பட திரளானோா் கலந்துகொண்டனா்.