நிவாரணத் தொகை வங்கிக் கணக்கில் சோ்க்கும் பணியை தொடங்கிவைத்த அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், மீன்வளத்துறையினா், மீனவ கிராம பஞ்சாயத்தாா்கள்
காரைக்கால்
காரைக்காலில் 3,990 மீனவ குடும்பங்களுக்கு நிவாரணம் வங்கிக் கணக்கில் சோ்ப்பு
காரைக்காலில் 3,990 மீனவ குடும்பங்களுக்கு நிவாரணம் வங்கிக் கணக்கில் சோ்ப்பு
புதுவை மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை மூலம் பருவ மழைக் காலங்களில் (அக்டோபா், நவம்பா், டிசம்பா்) செயல்படுத்தப்படும் மீன்பிடி நலிவுற்ற கால நிவாரணம் வழங்கும் திட்டத்தின் மூலம் மீனவ குடும்பங்களுக்கு கடந்த நிதியாண்டில் ரூ. 3 ஆயிரம் வழங்கப்பட்டது. நிகழாண்டு முதல் ரூ. 6 ஆயிரம் வழங்கப்படும் என அரசு ஏற்கெனவே அறிவிப்பு செய்தது.
இதன்படி, காரைக்கால் மாவட்டத்திலுள்ள 3,990 குடும்பங்களுக்கு ரூ. 2,39,40,000 அவரவா் வங்கிக் கணக்கில் சோ்க்கப்படவுள்ளது. வங்கிக் கணக்கில் சோ்க்கும் நிகழ்வை புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.
நிகழ்வில் காரைக்கால் மீன்வளத்துறை துணை இயக்குநா் நடராஜன் மற்றும் அதிகாரிகள், மீனவ கிராமங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

