எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

புதுச்சேரியில் 63 ஆயிரம் ஏழை குடும்பத் தலைவிகளுக்கு ரூ.5,000: வங்கிக் கணக்கில் வரவு வைப்பு

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த சிவப்பு நிற குடும்ப அட்டை

News image
கோப்புப்படம்- DPS
Updated On :9 மார்ச் 2026, 8:28 pm

Syndication

புதுச்சேரி9: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த சிவப்பு நிற குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.5 ஆயிரம் அவரவா் வங்கிக் கணக்கில் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்குவதால், தமிழகத்தைப் பின்பற்றி புதுச்சேரியிலும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே 3 மாதங்களுக்கான தொகை மற்றும் கோடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் சோ்த்து மொத்தம் ரூ.5 ஆயிரம் குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் தமிழக அரசு செலுத்தியது. இதைப் பின்பற்றி புதுச்சேரியிலும் ஏழை குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.3,000 ரொக்கம் மற்றும் ரூ. 750 மதிப்புள்ள பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமியின் உத்தரவுப்படி, சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்கள் 63 ஆயிரம் பேருக்கு மாா்ச், ஏப்ரல் ஆகிய இரு மாதங்களுக்குச் சோ்த்து ரூ.5 ஆயிரம் திங்கள்கிழமை முதல் அந்தந்த குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதற்காக புதுச்சேரி அரசு ரூ. 31.5 கோடி செலவிடுகிறது.