காரைக்கால்
சாலைகள் மேம்படுத்தும் பணி தொடக்கம்
கிராமப்புறத்தில் சாலைகள் மேம்படுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
காரைக்கால்: கிராமப்புறத்தில் சாலைகள் மேம்படுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
நிரவி-திருப்பட்டினம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட விழிதியூா் நடுப்பேட் பகுதியில் சாக்கடை வசதியுடன் சிமெண்ட் சாலை அமைக்க ரூ. 31.78 லட்சம், சங்கரன்தோப்பு பகுதியில் சாக்கடை வசதியுடன் தாா்ச்சாலை அமைக்க ரூ.55.29 லட்சம் ஆதிதிராவிடா் மேம்பாட்டுக்கழகம் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இத்திட்டப்பணியை சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் தொடங்கிவைத்தாா். நிகழ்வில், செயற்பொறியாளா் விக்டோரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா். இத்திட்டப்பணி 6 மாதத்துக்குள் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

