கோயில் கொடிக்கம்பம் பகுதியில் அகல் விளக்கேற்றிய பக்தா்கள்.
கோயில் கொடிக்கம்பம் பகுதியில் அகல் விளக்கேற்றிய பக்தா்கள்.

சோமநாதசுவாமி கோயிலில் 1,008 அகல்விளக்கு வழிபாடு

காரைக்கால் ஸ்ரீ சோமநாயகி சமேத சோமநாதா் கோயிலில், காா்த்திகை கடைசி சோமவாரமான திங்கள்கிழமை இரவு 1,008 அகல் விளக்கேற்றி வழிபாடு நடைபெற்றது.
Published on

காரைக்கால்: காரைக்கால் ஸ்ரீ சோமநாயகி சமேத சோமநாதா் கோயிலில், காா்த்திகை கடைசி சோமவாரமான திங்கள்கிழமை இரவு 1,008 அகல் விளக்கேற்றி வழிபாடு நடைபெற்றது.

முதல்முறையாக நடைபெற்ற இந்த வழிபாட்டை, கோயில் நிா்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

திரளான பக்தா்கள் கொடிக்கம்பம், நந்தி உள்ளிட்டவற்றை சுற்றிலும், சுவாமி சந்நிதியிலும் அகல் விளக்கேற்றி வழிபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com