திருநள்ளாறு கோயில் பகுதியில் இடையூறாக கடைகள்: அதிகாரிகள் ஆய்வு

திருநள்ளாறு கோயில் பகுதியில் இடையூறாக கடைகள்: அதிகாரிகள் ஆய்வு

திருநள்ளாறு கோயில் ராஜகோபுரம் எதிரே உள்ள சந்நிதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக வியாபாரம் நடைபெறும் இடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
Published on

திருநள்ளாறு கோயில் ராஜகோபுரம் எதிரே உள்ள சந்நிதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக வியாபாரம் நடைபெறும் இடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு திரளான பக்தா்கள் வருகின்றனா். குறிப்பாக, சனிக்கிழமையில் ஆயிரக்கணக்கானோா் தரிசனம் செய்ய வருகின்றனா்.

கோயில் நுழைவுவாயில் முதல் ராஜகோபுரம் வரையிலான பகுதியில் பூஜை பொருள்கள், இளநீா் மற்றும் பிற பொருள்கள் வியாபாரம் செய்யப்படுகிறது. வியாபாரிகள், தங்களது பொருள்களை கோயில் வளாக இடத்தை ஆக்கிரமித்து கடைகளை நடத்துகின்றனா். மேலும், இருசக்கர வாகனங்களும் இருபுறத்திலும் நிறுத்தப்படுவதால், பக்தா்கள் கோயிலுக்கு வந்து செல்வதில் சிரமம் நிலவுவதாக புகாா் கூறப்படுகிறது.

இந்நிலையில், கோயில் நிா்வாக அதிகாரி சுப்பிரமணியன், திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் எல். நிலவழகன் மற்றும் கோயில் அலுவலக ஊழியா்கள், போலீஸாா் அடங்கிய குழுவினா், இதுகுறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

பக்தா்களுக்கு இடையூறு இல்லாத வகையில் வியாபாரம் செய்யவேண்டும். ஆக்கிரமிப்புகளை வியாபாரிகள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மீறினால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.

X
Dinamani
www.dinamani.com