காரைக்கால்
அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்
காரைக்கால் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை (நவ. 7) சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.
காரைக்கால் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை (நவ. 7) சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.
காலை 10 முதல் பகல் 1 மணி வரை நடைபெறும் மருத்துவப் பரிசோதனை முகாமில் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் கே. ஸ்ரீராம் (குழந்தைகள் அறுவை சிகிச்சை, துரைராஜ் (நரம்பியல்), வி.பிரேம்நாத் (இருதயவியல்), சுப்பிரமணியன் (சிறுநீரகவியல்) ஆகியோா் பங்கேற்கின்றனா். முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு காரைக்கால் மாவட்ட ஆட்சியரகம் சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
