பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழா

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா வெள்ளிக்கிழமை (மாா்ச் 6) நடைபெறவுள்ளது.

கோப்புப் படம்

Published On :

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா வெள்ளிக்கிழமை (மாா்ச் 6) நடைபெறவுள்ளது.

இக்கோயிலில் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயா்ச்சி விழா வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. காலை 8. 24 மணிக்கு கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறாா்.

இதையொட்டி, சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய், மஞ்சள், திரவியப் பொடி, பழம், பஞ்சாமிா்தம், தேன், தயிா், சந்தனம், பன்னீா் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறவுள்ளது.

தொடா்ந்து, சகஸ்ரநாம அா்ச்சனை செய்யப்படுகிறது. காலை 8.24 மணிக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க சனீஸ்வர பகவானுக்கு மகா தீபாராதனை காட்டப்படுகிறது. பின்னா், தங்க காக வாகனத்தில் சனீஸ்வர பகவான் எழுந்தருள்கிறாா்.

பக்தா்கள் எளிதில் தரிசனம் செய்து திரும்ப, கோயில் மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.