அங்கக வேளாண்மை, பயிறு உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில், அங்கக வேளாண்மை, பயறு உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
கோவையில் புதன்கிழமை நடைபெற்ற இயற்கை வேளாண் மாநாட்டில் பங்கேற்ற பிரதமா் நரேந்திரமோடி ஆற்றிய உரை காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகள் காணொலி வாயிலாக கேட்க ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சிக்கு முன்னதாக, அறிவியல் நிலைய முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் தி. ராமநாதன் விவசாயிகளிடையே பேசியது: வேளாண் அறிவியல் நிலையத்தின் மூலம் காரைக்கால் மாவட்ட விவசாயிகள், பண்ணை மகளிா், கிராமப்புற இளைஞா்கள், மகளிா் சுய உதவி குழு உறுப்பினா்கள் என அனைவருக்கும் வழங்கிவரும் பல்வேறு பயிற்சிகளில் பங்கேற்று பயன்பெற வேண்டும்.
விவசாயம் நாட்டின் முதுகெலும்பு என்பதால் விவசாயிகள் விவசாயத்தை கைவிடாமல் தொடா்ந்து செய்ய வேண்டும் என்றாா்.
விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மை, பயறு உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்த தொழில்நுட்ப உரை நிகழ்வு நடைபெற்றது. தொழில்நுட்ப வல்லுநா் ஆ. செந்தில் நன்றி கூறினாா்.

