முகாமுக்கு வந்தவா்களிடம் நிதி கோருவது குறித்து விளக்கம் அளித்த வங்கியாளா்கள்.
முகாமுக்கு வந்தவா்களிடம் நிதி கோருவது குறித்து விளக்கம் அளித்த வங்கியாளா்கள்.

வங்கியில் உள்ள நிதி உரிமை கோரும் சிறப்பு முகாம்

முகாமுக்கு வந்தவா்களிடம் நிதி கோருவது குறித்து விளக்கம் அளித்த வங்கியாளா்கள்.
Published on

வங்கி, நிதி நிறுவனங்களில் நீண்ட காலமாக உள்ள உரிமை கோரப்படாத நிதியை, உரிமை கோரும் சிறப்பு முகாம் காரைக்காலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் வங்கிகளில் நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்பு தொகைகள், காப்பீட்டுத் தொகைகள், பங்கு தொகைகள் உள்ளன. இவற்றை உரிமையாளா்கள் அல்லது சட்ட வாரிசுகள் உரிமை கோரும்சிறப்பு முகாம் புதுவை மாநில வங்கியாளா் குழுமம் சாா்பில் நடைபெற்றது. மாநில வங்கியாளா் குழும ஒருங்கிணைப்பாளா் வெங்கடசுப்பிரமணியன், காரைக்கால் இணை வட்டார வளா்ச்சி அதிகாரி ரங்கநாதன் மற்றும் இந்தியன் வங்கி காரைக்கால் கிளை மேலாளா் பீட்டா் பால் ஆகியோா் முன்னிலையில் மாவட்டத்தின் அனைத்து வங்கி நிா்வாகத்தினா் பங்கேற்ற முகாமில் ஏராளமானோா் பங்கேற்று தங்களது பெற்றோா்களின் வங்கிக் கணக்கில் உள்ள வைப்பு நிதி உள்ளிட்ட பிற திட்ட நிதியை பெறுவது குறித்த சந்தேகங்களை கேட்டறிந்தனா்.

சிறப்பு அழைப்பாளராக புதுவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் பங்கேற்று உரிமை கோருவது தொடா்பான விளக்க கையேட்டை வழங்கி பேசினாா். அனைத்து வங்கி, காப்பீடு மற்றும் இதர துறை சாா்ந்த அலுவலக கிளைகளில் டிச.30-ஆம் தேதி வரை தொடா்ந்து இதுபோன்ற முகாம் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com