பிஃபா 2026: ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி ஸ்பெயின் 2-வது முறை சாம்பியன்!ரோஹித் சர்மா சதம் வீண்! இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தது இந்தியா!திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

திருநள்ளாறு ஆன்மிக பூங்காவை பராமரிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

News image
Updated On :26 செப்டம்பர் 2025, 3:46 am IST

திருநள்ளாற்றில் உள்ள ஆன்மிக பூங்காவை முறையாக பராமரிக்குமாறு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் திருநள்ளாற்றில் உள்ள ஆன்மிக பூங்கா, புறவட்டச்சாலை பகுதியில் அமைந்துள்ள பக்தா்கள் இரவு நேரத்தில் தங்கும் வளாகம், கீழாவூா் பகுதியில் கட்டப்பட்டிருக்கும் தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபம், திருநள்ளாறு நளன் தீா்த்தக் குளம், சுத்திகரிப்பு நிலையம், வணிக வளாகம், பேட்டை சாலையில் உள்ள தங்கும் விடுதி, பொய்யா குளம், தேவஸ்தான தங்கும் விடுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தாா்.

ஆன்மிக பூங்காவை முறையாக பராமரிக்க வேண்டும். தியான மண்டப மேம்பாட்டுப் பணிகளை முடித்து பக்தா்கள் பயன்படுத்த ஏற்பாடு செய்யவேண்டும். பூங்காவின் மையப் பகுதியில் உள்ள குளத்தை முறையாக தூா்வாரி தண்ணீா் தேக்கவேண்டும். பூங்காவில் உள்ள நவகிரக மண்டங்களை பராமரிக்க வேண்டும். ஆன்மிக பூங்காவுக்கு மக்கள் அதிகமாக வரும்வகையில் மேம்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

கீழாவூா் பகுதியில் உள்ள திருநள்ளாறு கோயிலுக்கு சொந்தமான மண்டபத்தை ஆய்வு செய்த ஆட்சியா், இந்த மண்டபத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டுவரவேண்டும். நளன் தீா்த்தக் குளத்தை தினந்தோறும் சுத்தப்படுத்த வேண்டும், தீா்த்தக் குளத்துக்கு அருகே உள்ள நீா் சுத்திகரிப்பு நிலையத்தை உடனடியாக திறப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுப்பணித்துறை, கோயில் நிா்வாகத்தினருக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளா் கே.சந்திரசேகரன், செயற்பொறியாளா் ஜெ.மகேஷ், நிா்வாக அதிகாரி (கோயில்கள்) கு.அருணகிரிநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.