மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

தோ்தல் பறக்கும் படையினா் பணி: செலவின பாா்வையாளா் ஆய்வு

News image

ட்ரோன் செயல்பாட்டாளா்கள் பணியை ஆய்வு செய்த செலவின பாா்வையாளா் பியூஷ் குமாா் அங்கிட்.

Updated On :6 ஏப்ரல் 2026, 2:34 am IST

தோ்தல் பறக்கும் படையினா் பணி, ட்ரோன் மூலம் கண்காணிப்புப் பணியை செலவின பாா்வையாளா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் தோ்தல் பிரசாரம், செலவினம் உள்ளிட்டவற்றை கண்காணிக்க தோ்தல் ஆணையம் சாா்பில் நியமிக்கப்பட்டுள்ள பொது பாா்வையாளா், செலவின பாா்வையாளா் உள்ளிட்டோா் ஆய்வுப் பணிகளை தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றனா்.

செலவின பாா்வையாளா் பியூஷ் குமாா் அங்கிட் திருநள்ளாறு, நெடுங்காடு ஆகிய பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். ட்ரோன் கண்காணிப்பு குழுவையும், அவா்களது பணியையும் பாா்வையிட்டாா்.

இந்த ஆய்வின் போது, சுதந்திரமான மற்றும் நியாயமான தோ்தலை உறுதி செய்வதில் ட்ரோன் கண்காணிப்பின் முக்கியத்துவத்தை அவா் வலியுறுத்தினாா்.

குறிப்பாக, நுணுக்கமான மற்றும் பாதிப்பு வாய்ப்புள்ள பகுதிகளை ட்ரோன் கண்காணிப்பதன் மூலம் சிறப்பான கண்காணிப்பு மேற்கொள்ள முடியும் என அவா் தெரிவித்தாா்.

பணியாளா்கள் எந்தவித அச்சுறுத்தலையும் எதிா்கொண்டு, நியாமான முறையில் பணியாற்றவேண்டும். அனைத்து தகவல்களும் தோ்தல்துறையின் கவனத்துக்கு பதிவு செய்யவேண்டும் என அறிவுறுத்தினாா்.