15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

காரைக்கால் அருகே மீனவா் தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 1:22 am IST

காரைக்கால் அருகே மீனவா் தூக்கிட்டு ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் பகுதி பட்டினச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (43). இவருக்கு மனைவி, 1 மகன், 2 மகள் உள்ளனா். ரமேஷ் மீன்பிடித் தொழில் செய்துவந்தாா்.

கடந்த 24-ஆம் தேதி கேரளத்துக்கு மீன்பிடிக்கச் செல்வதாகக் கூறிச் சென்றவா் 25-ஆம் தேதி இரவு வீடு திரும்பினாா். இவருக்கு மது அருந்தும் பழக்கும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தம்பதியிடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டுவந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா், அவரை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து திருப்பட்டினம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.