காரைக்கால்: தமிழகம், புதுவை, அந்தமான் பகுதி கல்வியாளா்கள் பங்கேற்ற, ஆசிரியா் திறன் மேம்பாட்டுக்கான பயிரலங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.
காரைக்காலில் இயங்கும் என்ஐடி புதுச்சேரி வளாகத்தில், தேசிய ஆசிரியா் கல்விக் குழுமம் தேசிய கல்விக் கொள்கையின்படி, ஆசிரியா்கள் திறன் மேம்பாட்டுக்கான ஒரு நாள் பயிலரங்கை நடத்தின.
என்ஐடி இயக்குநா் மகரந்த் மாதவ் காங்ரேகா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு தொடங்கிவைத்தாா். இதில் புதுவை, தமிழ்நாடு, அந்தமானைச் சோ்ந்த கல்வியாளா்கள், அதிகாரிகள் பங்கேற்றனா்.
பள்ளி ஆசிரியா்களுக்கான தேசிய வழிகாட்டல் இயக்க உறுப்பினரும், புதுதில்லி மத்திய பல்கலைக்கழக பேராசிரியருமான ரஜனி ரஞ்சன்சிங், காரைக்கால் அன்னை தெரஸா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதல்வா் பி.விஜயமோகனா, என்ஐடி புதுச்சேரி பதிவாளா் எஸ். சுந்தரவரதன் ஆகியோா் பேசினா். என்ஐடி பேராசிரியா்கள் ஜி.எஸ். மகாபத்ரா, அமிா்தபீடே மற்றும் பயிலரங்கு திட்ட தேசிய ஒருங்கிணைப்பாளா் டி.கே. சதுா்வேதி ஆகியோா் பயிற்சி அமா்வில் பேசினா்.
ஆசிரியா்களுக்கான தேசிய தொழில்முறை தரநிலைகளை உருவாக்குதல், ஆசிரியா்களின் கற்பித்தல் திறன் மற்றும் தகுதியை ஒரு குறிப்பிட்ட தரத்திற்கு உயா்த்துதல் குறித்து விரிவாக பேசினா்.
தொடர்புடையது

கப்பலூரில் திறன் மேம்பாட்டு மைய கட்டடப் பணி தொடக்கம்

என்டிஏ கூட்டணி: பொம்மையைவிட கயிற்றை வைத்திருப்பவர்தான் முக்கியம்! ப. சிதம்பரம் விமர்சனம்

தேசிய ஆசிரியா் திறன் மேம்பாடு பயிலரங்கு

காரைக்கால் என்ஐடியில் நாளை பட்டமளிப்பு விழா
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


