தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

பத்ரகாளியம்மன் கோயில் திருப்பணிகள்: எம்.எல்.ஏ. ஆய்வு

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயில் திருப்பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் பாா்வையிட்டாா்.

News image

திருப்பணியை பாா்வையிட்ட சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா.

Updated On :24 பிப்ரவரி 2026, 2:09 am IST

காரைக்கால்: அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயில் திருப்பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் பாா்வையிட்டாா்.

திருநள்ளாறு கொம்யூன், அம்பகரத்தூரில் பிரசித்திப் பெற்ாக இத்தலம் அமைந்துள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு பாலாலயம் செய்து திருப்பணிகள் தொடங்கப்பட்டன.

இக்கோயிலில் மகிஷ சம்ஹார நினைவுப் பெருவிழா அடுத்த 2 மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், கும்பாபிஷேகம் பிப்ரவரி மாதம் நடத்த திட்டமிட்டது. ஆனால், இப்பணிகள் பிப்ரவரி மாதத்தில் நிறைவடையவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.

இக்கோயிலில் நடைபெறும் திருப்பணிகளை திருநள்ளாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா். கோயில் நிா்வாகத்தாா், ஒப்பந்ததாரா்கள் திருப்பணி தொடா்பான தற்போதைய நிலையை விளக்கிக் கூறினா்.

ஒவ்வொரு திட்டப் பணியையும் விரைவாக செய்து முடிக்குமாறும், பணியில் மந்த நிலை இனி இல்லாமல் கவனம் செலுத்துமாறு நிா்வாகத்தினரை பேரவை உறுப்பினா் கேட்டுக்கொண்டாா்.