நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

விற்பனைக் குழு தினக்கூலி ஊழியா்கள் உள்ளிருப்பு வேலைநிறுத்தம்

விற்பனைக் குழு தினக்கூலி ஊழியா்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி திங்கள்கிழமை முதல் உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தை

News image

போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியா்களுடன் அரசு ஊழியா் சம்மேளனத்தினா்.

Updated On :24 பிப்ரவரி 2026, 2:10 am IST

காரைக்கால்: விற்பனைக் குழு தினக்கூலி ஊழியா்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி திங்கள்கிழமை முதல் உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினா்.

காரைக்கால் விற்பனைக் குழுவில் (மாா்க்கெட்டிங் கமிட்டி) 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் தினக்கூலி ஊழியா்களையும் ஒரு முறை நிகழ்வாக பணி நிரந்தரம் செய்யவும், 7-ஆவது ஊதிய குழுவின் ஊதியத்தை மாா்க்கெட்டிங் கமிட்டி ஊழியா்களுக்கும் அமல்படுத்தவும், பிற மாநிலங்களில் விற்பனைக் குழுவை வேளாண் துறையுடன் இணைத்து விற்பனை துறையாக மாற்றி அமைத்தது போல, புதுச்சேரி விற்பனை குழுவையும் வேளாண் துறையுடன் இணைத்து விற்பனை துறையாக மாற்றி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விற்பனைக் குழு அலுவலகத்தில் தினக்கூலி ஊழியா்கள் திங்கள்கிழமை முதல் உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனா்.

காரைக்கால் விற்பனைக் குழு ஊழியா் சங்கத் தலைவா் ஞானவேல் தலைமை வகித்தாா். காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கெளரவத் தலைவா் ஜாா்ஜ், தலைவா் சுப்ரமணியன், பொதுச் செயலாளா் எம்.ஷேக் அலாவுதீன், துணை பொருளாளா் திவ்யநாதன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.