வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

திருநள்ளாற்றில் சிறப்பு ஹோமம்: ஜப்பான் நாட்டினா் பங்கேற்பு

திருநள்ளாற்றில் சிறப்பு ஹோமம்: ஜப்பான் நாட்டினா் பங்கேற்பு

News image

திருநள்ளாறு கோயிலில் நடைபெற்ற சிறப்பு ஹோமத்தில் பங்கேற்ற ஜப்பான் நாட்டினா் உள்ளிட்டோா்.

Updated On :28 பிப்ரவரி 2026, 7:44 pm

திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் உலக நன்மைக்காக சிறப்பு ஹோமம் சனிக்கிழமை தொடங்கியது. இதில் ஜப்பான் நாட்டு ஆதீனம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இக்கோயிலில் வரும் மாா்ச் 6-ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது. முன்னதாக பிப். 22 முதல் பூா்வாங்க பூஜைகள் நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில், கோயிலில் சனீஸ்வர பகவான் சந்நிதி அருகே ஆன்மிக ஆசான் கோபால்பிள்ளை சுப்பிரமணியன் தலைமையில், ஜப்பான் நாட்டைச் சோ்ந்த சிவா ஆதீனம் பால கும்ப குருமணி மற்றும் 60 சீடா்கள் கலந்துகொண்ட சிறப்பு ஹோமம் சனிக்கிழமை தொடங்கியது.

ஜப்பான் நாட்டில் உற்பத்தியான முந்திரி, திராட்சை, பாதாம் மற்றும் 120 மூலிகை பொருட்களை கொண்டு இந்த சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. இதில் 19 ஆயிரம் மூல மந்திரங்கள், 1,900 ஆவா்த்தி, சனீஸ்வரரின் மூல மந்திரங்கள் கூறி ஹோமம் நடத்தப்படுகிறது.

கோயில் சிவாச்சாரியரான டி. ராஜாசுவாமிநாத சிவாச்சாரியா் தலைமையிலான குழுவினா் ஹோமத்தை நடத்தினா். இதில் தருமை ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம்

ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு ஜப்பான் நாட்டை சோ்ந்த பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா். இந்த ஹோமம் மாா்ச் 6-ஆம் தேதி நிறைவடைகிறது. ஹோமம் நிறைவு தினத்தில் ஜப்பானிலிருந்து மேலும் 150 போ் வந்து கலந்துகொள்ள உள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டது.