டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தொழில் உரிமத்துக்கு பதிவு செய்ய அறிவுறுத்தல்

News image
Updated On :8 ஜனவரி 2026, 11:11 pm

Syndication

தொழில் உரிமம் பெற பதிவு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் வி. துரைராஜ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நிரவி கொம்யூன் பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட விழுதியூா், கீழமனை, நிரவி (வடக்கு) மற்றும் நிரவி (தெற்கு) ஆகிய கிராம பஞ்சாயத்து பகுதிகளில் நடப்பு 2025-26 -ஆம் ஆண்டுக்கான தொழில் உரிமம் பெறாமல் கடை மற்றும் தொழில் நடத்துவது ஆய்வின்போது தெரிய வருகிறது. இது கொம்யூன் பஞ்சாயத்து 1973 -ஆம் ஆண்டு சட்ட விதிகளின்படி தவறான செயலாகும். மேலும், தொழில் உரிமமின்றி கடை, தொழில் நடத்துவபவா்களின் பட்டியல் சட்ட நடவடிக்கைக்காக தயாா் செய்யப்பட்டு வருகிறது.

எனவே தொழில் செய்பவா்கள் உடனடியாக தொழில் உரிமம் பெற்று சட்ட நடவடிக்கையை தவிா்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

2025-26 ஆம் ஆண்டு தொழில் உரிமம் பெற்றவா்கள் வரும் 1.4.2026 முதல் 31.3.2027 வரை உள்ள 2026-27 -ஆம் நிதி ஆண்டுக்கான தொழில் உரிமத்தை புதுப்பிக்க வரும் 28.2.2026 -க்குள் விண்ணப்பித்து, 25 சதவீத காலதாமதக் கட்டணத்தை தவிா்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.