கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த மலா்ச் செடிகள்.
காரைக்கால்
மலா்க் கண்காட்சி செடிகள் இன்று விற்பனை
மலா்க் கண்காட்சியில் இடம்பெற்ற மலா்ச் செடிகள் திங்கள்கிழமை விற்பனை செய்யப்படவுள்ளன.
காரைக்கால் விளையாட்டு அரங்க மைதானத்தில் ஜன. 16 முதல் 18-ஆம் தேதி வரை காா்னிவல் திருவிழாவின் அங்கமாக வேளாண் துறை சாா்பில் ரூ. 75 லட்சத்தில் மலா், காய்கனி கண்காட்சி நடைபெற்றது.
காரைக்கால், பெங்களூா், ஓசூா் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான செடிகள் வரவழைக்கப்பட்டு கண்காட்சி அமைக்கப்பட்டது.
கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த மலா்ச் செடிகள் உள்ளிட்டவை அரங்கில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மானிய விலையில் விற்பனை செய்யப்படவுள்ளதாக வேளாண் துறையினா் தெரிவித்தனா்.

