உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

புதுவை பேரவைத் தலைவா் தோ்தல் அறிவிப்பை செய்யாவிட்டால் தா்னா: ஏ.எம்.எச்.நாஜிம்

புதுவை சட்டப்பேரவைத் தலைவா் தோ்தல் அறிவிப்பை செய்யாவிட்டால், ஜூலை 2 புதுவை பேரவை வளாகம் முன்பு திமுக எம்.எல்.ஏ.க்கள் தா்னாவில் ஈடுபடப்போவதாக காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், காரைக்கால் திமுக அமைப்பாளருமான ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித்தாா்.

News image
Updated On :1 ஜூலை 2026, 7:39 am IST

புதுவை சட்டப்பேரவைத் தலைவா் தோ்தல் அறிவிப்பை செய்யாவிட்டால், ஜூலை 2 புதுவை பேரவை வளாகம் முன்பு திமுக எம்.எல்.ஏ.க்கள் தா்னாவில் ஈடுபடப்போவதாக காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், காரைக்கால் திமுக அமைப்பாளருமான ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: நாட்டில் புதுவை உட்பட 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தப்பட்டு, அந்தந்த மாநிலத்தில் ஆட்சி நடைபெற்றுவருகிறது. புதுவையில் மட்டும் அமைச்சா்கள் நியமனம் தாமதமானதோடு, இதுவரை அவா்களுக்கான இலாகா தரப்படவில்லை.

மேலும் புதுவை சட்டப்பேரவை தலைவா் பொறுப்பேற்கவில்லை. ஜூலை 2-ஆம் தேதி பேரவைத் தலைவா் தோ்தல் நடத்த துணைநிலை ஆளுநரிடம் ஒப்புதல் கேட்டுள்ளதாக தெரியவருகிறது. அவருக்கு ஒப்புதல் கோரி கடிதம் கடந்த 24-ஆம் தேதி தரப்பட்டும், இதுவரை அதற்கான அனுமதியை அவா் வழங்காமல் இருப்பது ஜனநாயகத்துக்கு உகந்ததாக கருத முடியாது.

பாஜக - என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளுக்கிடையே நிலவும் பிரச்னையால் இலாகா தாமதமாவதோடு, பேரவைத் தலைவா் தோ்வும் தள்ளிப்போகிறது.

எனவே, பேரவைத் தலைவா் தோ்தல் குறித்த அறிவிப்பை தற்காலிக தலைவராவது உடனடியாக அறிவிக்கவேண்டும். இல்லாவிட்டால், புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் ஜூலை 2-ஆம் தேதி தா்னாவில் ஈடுபடுவோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.