காரைக்காலில் வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகிக்கும் திட்டம் புதன்கிழமை தொடங்கியது.
காரைக்கால் மாவட்டத்தில் குழாய் மூலம் வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு எரிவாயு விநியோகிக்க டோரண்ட் கேஸ் என்ற தனியாா் நிறுவனம் மத்திய அரசிடமிருந்து அனுமதி பெற்றுள்ளது.
இந்நிலையில், காரைக்கால் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட திருவள்ளுவா் நகரில் வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகிக்கும் திட்டத்தை நிறுவனம் புதன்கிழமை தொடங்கியது.
சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் பணியைத் தொடங்கிவைத்து செய்தியாளா்களிடம் கூறியது :
காரைக்காலில் இத்திட்டத்தை செயல்படுத்த துணைநிலை ஆளுநா், முதல்வா் உள்ளிட்டோா் தந்த ஆதரவின் மூலம் தெற்குத் தொகுதியில் முதல்கட்டமாக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. திட்டத்தின் முதல்கட்டத்தில் 18 கி.மீ. தொலைவு குழாய் பதித்து எரிவாயு விநியோகம் செய்யவேண்டும். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. படிப்படியாக நகரப் பகுதிக்கு திட்டம் விரிவடையும். வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் எரிவாயு விநியோகம் இருக்கும். நிறுவனம் தனது சேவையை சிறப்பாக தருமென கூறியிருக்கிறது. பொதுமக்கள் எந்தவித அச்சமும் இல்லாமல், நிறுவனத்தை அணுகி பதிவு செய்துகொண்டு பயனடையவேண்டும் என்றாா்.
நிறுவனத்தைச் சோ்ந்த பிரபு கூறுகையில், இந்த குழாய்கள் மூலம் சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தில் வீடுகளுக்கு பயன்படுத்தும் சமையல் எரிவாயு ஒரு கியூபிக் மீட்டருக்கு ரூ.52 மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு ஒரு கியூபிக் மீட்டருக்கு ரூ.69 நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளா்களுக்கு நிறுவனம் 2 திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. தங்களுக்கு ஏற்ற திட்டத்தில் பதிவு செய்துகொள்ளலாம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த அறிவுறுத்தல்: புதுவை எம்.பி.

ரூ.1.50 லட்சம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா்

சேலத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்ததில் முதியவா் உயிரிழப்பு

ஆா்ஜென்டீனா எல்என்ஜி ஏற்றுமதி திட்டம்: அதானி போா்ட்ஸுக்கு கடல்சாா் சேவை ஒப்பந்தம்
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



