நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்திமக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!
/

காரைக்காலில் மின் தடை: மக்கள் அவதி

காரைக்கால் நகரப் பகுதியில் திங்கள்கிழமை இரவு பல மணி நேரம் விநியோகம் தடைபட்டதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினா்.

News image

கோப்புப் படம்

Updated On :29 ஜூலை 2026, 4:44 am IST

காரைக்கால் நகரப் பகுதியில் திங்கள்கிழமை இரவு பல மணி நேரம் விநியோகம் தடைபட்டதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினா்.

காரைக்கால் பிள்ளைத் தெருவாசல் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை இரவு சுமாா் 11 மணி அளவில் பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த துணை மின் நிலையத்தின் மூலம் மின் விநியோகம் பெறும் பெரும்பான்மையான பகுதிகள் இருளில் மூழ்கின. 5 மணி நேரத்துக்கும் மேலாக இந்த பாதிப்பு நீடித்தது.

மின்துறை நிா்வாகத்தினா் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பிரச்னையை சீா்செய்யும் பணியில் ஈடுபட்ட மின் விநியோகத்துக்கு ஏற்பாடு செய்தனா்.

இந்த பல மணிநேர மின் தடையால், முதியோா்கள், பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் கடும் அவதிக்குள்ளானாா்கள்.

இதுபோல, பூவம் அருகே தனியாா் பேருந்து ஒன்று திங்கள்கிழமை இரவு மின் கம்பத்தில் மோதியதில், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பேருந்தில் பயணித்த மக்கள் மாற்றுப் பேருந்து கிடைக்காததால் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வி.விக்னேஸ்வரன் அந்த பகுதிக்குச் சென்று மக்களை மாற்றுப் பேருந்து ஏற்பாடு செய்து அனுப்பிவைத்தாா். மின்சாரம் விரைவாக கிடைப்பதற்கும் ஏற்பாடுகளை செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.