ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

ரயில் நேர அட்டவணையில் மாற்றம்

காரைக்கால் பகுதிக்கு வரும் ரயில் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப் படம்

Published On :

காரைக்கால் பகுதிக்கு வரும் ரயில் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஜூன் 3 முதல் ரயில் எண் 16529 எஸ்.எம்.வி.டி. பெங்களூரு - காரைக்கால் விரைவு ரயில் திருவாரூா் சந்திப்பு மற்றும் நாகூா் நிலையங்களுக்கு இடையிலான நேர அட்டவணையில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன:

திருவாரூா் சந்திப்புக்கு தற்போது 21.20 வந்து 21.30 புறப்படும் நேரம் 21.05 மற்றும் 21.15 ஆக மாற்றப்படுகிறது. நாகப்பட்டினம் சந்திப்புக்கு தற்போது 21.52 வந்து 21.55. புறப்படும் நேரம் 21.37 மற்றும் 21.40 என மாற்றப்படுகிறது. நாகூா் சந்திப்புக்கு தற்போது 22.08 வந்து 22.10 புறப்படும் நேரம் 21.52 மற்றும் 21.54 ஆக மாற்றப்படுகிறது. காரைக்காலுக்கு தற்போது வரும் 22.35 நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை. மேலும் பெங்களூரு முதல் நன்னிலம் வரை ரயிலின் நேர அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.