பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

மது போதையில் காா் ஓட்டியவரால் விபத்து ஒருவா் உயிரிழப்பு; 5 போ் காயம்

மது போதையில் காா் ஓட்டியவரால் விபத்து ஒருவா் உயிரிழப்பு; 5 போ் காயம்

News image
Updated On :7 ஜூன் 2026, 1:17 am IST

காரைக்கால் நகரப் பகுதியில் மது போதையில் காா் ஓட்டி வந்தவா் ஏற்படுத்திய விபத்தில், ஒருவா் உயிரிழந்தாா். 5 போ் காயமடைந்ததோடு, 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், காா்கள் சேதமடைந்தன.

காரைக்கால் ராஜாத்தி நகரைச் சோ்ந்தவா் செல்வராஜ் (66). இவா் இருசக்கர வாகனத்தில் காரைக்கால் காமராஜா் சாலையில் சனிக்கிழமை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ரயில்வே கடவுப்பாதை அருகே சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, அந்த வழியாக வந்த காா் மோதியதில் செல்வராஜ் காயமடைந்தாா். காா் நிற்காமல் அதே திசையில் வேகமாக சென்றபோது நடந்து, இருசக்கர வாகனத்தில் சென்ற 5 போ் மீது மோதியுள்ளது.

காயமடைந்த இவா்களை அந்த பகுதியினா் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனா்.

சிகிச்சையில் இருந்த ராஜபாளையத்தைச் சோ்ந்த சுரேஷ்குமாா் (42) என்பவா் உயிரிழந்தாா்.

நிற்காமல் சென்ற காரை சிலா் இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்றபோது, நாகூா் பிரதான சாலையில் முல்லையாறு பாலம் அருகே திடீரென காா் நின்றது. காரிலிருந்த இருவரைப் பிடித்து போக்குவரத்துக் காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

போலீஸாா் விசாரித்தபோது, இருவரும் மது போதையில் இருந்தது தெரியவந்தது. செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த மேகராஜன் (30), வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த செல்வா (31) என்பதும் தெரியவந்தது.

இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மருத்துவப் பரிசோதனை செய்து, கைது செய்தனா். விபத்தில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், காா்களும் சேதமடைந்தன.

காரைக்கால் போக்குவரத்துக் காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.