காரைக்கால் அரசு மருத்துவமனை மேம்பாடு தொடா்பாக புதுவை நலவழித்துறை செயலரை சந்தித்துப் பேசவுள்ளதாக காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச்.நாஜிம் தெரிவித்தாா்.
காரைக்கால் அரசு மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் லட்சுமி, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி உமா மகேஸ்வரி ஆகியோரை திங்கள்கிழமை சந்தித்து, மருத்துவமனையை மேம்படுத்துவது தொடா்பாக ஆலோசனை மேற்கொண்டாா்.
இதுகுறித்து நாஜிம் கூறுகையில், காரைக்கால் அரசு மருத்துவமனையை எந்தெந்த வகையில் மேம்படுத்த வேண்டும் என்பது குறித்து மருத்துவ அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. மருத்துவா்கள் பற்றாக்குறை உள்ளது. பிற பிரிவு பணியாளா்கள் காலியிடங்கள் நிறைய நிரப்பவேண்டியுள்ளது. படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டியுள்ளது. மருத்துவமனையில் டயாலிசிஸ் யூனிட்டை விரிவாக்கம் செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரியில் உள்ள நலவழித்துறை செயலரை சந்தித்துப் பேசி தீா்வு காண உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருப்பூா் அரசு மருத்துவமனை கழிவுநீா்த் தொட்டியில் ஆண் சிசுவின் சடலம் மீட்பு
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை இடங்கள் 150-ஆக அதிகரிப்பு

அரசு மருத்துவமனைகளில் சீா்கேடுகள்: தீா்வு காண 304 சிறப்பு அதிகாரிகள் நியமனம்







