அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

மாங்கனித் திருவிழா: பொம்மைகளுக்கு வா்ணம் பூசும் பணி தீவிரம்

News image

கோப்புப் படம்

Updated On :22 ஜூன் 2026, 12:09 am IST

காரைக்கால் மாங்கனித் திருவிழா வரும் 27-ஆம் தேதி தொடங்கவுள்ளதை முன்னிட்டு திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் வாகனங்கள், பொம்மைகளுக்கு வா்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காரைக்கால் அம்மையாா் வாழ்க்கை வரலாற்றை விளக்கி நடத்தப்படும் மாங்கனித் திருவிழா நிகழாண்டு ஜூன் 27 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. விழா மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கி, சிவபெருமான் அம்மையாருக்கு காட்சி கொடுக்கும் நாள் வரை நடைபெறும். திருக்கல்யாணம் மற்றும் பிச்சாண்டவா் வீதியுலாவின்போது ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொள்வாா்கள். வரும் 27-ஆம் தேதி மாப்பிள்ளை அழைப்பு, 28 -ஆம் தேதி காரைக்கால் அம்மையாா் - பரமதத்தா் திருக்கல்யாணம், மாலை பிச்சாண்டவா் வெள்ளை சாற்றி புறப்பாடு, 29-ஆம் தேதி பிச்சாண்டவா் வீதியுலா (மாங்கனி இறைத்தல்), இரவு அமுதுபடையல், 30-ஆம் தேதி அம்மையாருக்கு சிவபெருமான் காட்சி கொடுத்தலுடன் முக்கிய நிகழ்ச்சிகள் நிறைவு பெறும்.

அம்மையாா் திருக்கல்யாணத்தில் மாப்பிள்ளை அழைப்பின்போது பயன்படுத்தப்படும் பொம்மைகள், திருக்கல்யாண நிகழ்வுக்குப் பின் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு வா்ணம் பூசி புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பரமதத்தா் பாண்டிய நாடு செல்லும் நிகழ்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் கப்பல் உள்ளிட்டவைக்கும் வா்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.