மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

காரைக்கால் துறைமுகத்தில் குடியேற்ற சோதனைச் சாவடி திறப்பு

காரைக்கால் துறைமுகத்தில் குடியேற்ற சோதனைச் சாவடி சனிக்கிழமை திறக்கப்பட்டது.

News image

சோதனைச் சாவடியை திறந்துவைத்த மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி. உடன் எஸ்எஸ்பி லட்சுமி செளஜன்யா, துறைமுக முதன்மை செயல்பாட்டு அதிகாரி சச்சின் ஸ்ரீவத்ஸவா.

Updated On :27 ஜூன் 2026, 10:52 pm IST

காரைக்கால் துறைமுகத்தில் குடியேற்ற சோதனைச் சாவடி சனிக்கிழமை திறக்கப்பட்டது.

துறைமுகம், விமான நிலையங்களில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் இமிக்ரேஷன் என்கிற குடியேற்றப் பிரிவு அமைக்கப்படுகிறது. குடியேற்ற மோசடி தொடா்பாக விசாரணை செய்தல், தடுத்தல், நிலையத்துக்கு வந்தவா்களின் விசா சோதனை, தகுதி பெறாதவா்களை தடுத்தல் உள்ளிட்ட பணிகள் இப்பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகின்றன.

காரைக்கால் தனியாா் துறைமுகம் இயங்கத் தொடங்கிய காலத்திலிருந்து குடியேற்றப் பிரிவு அமைக்கப்படவில்லை.

சரக்கு கப்பல் போக்குவரத்து மட்டுமே இருப்பதால், இதற்கு உள்துறை அமைச்சகம் முக்கியத்துவம் தராமல் இருந்தது.

இந்நிலையில், இத்துறைமுகத்தில் குடியேற்றப் பிரிவு அமைக்கவும், மாநில அரசுக்கு அதிகாரம் அளித்ததன் விளைவாக, துறைமுக வளாகத்தில் தனி பிரிவு தொடங்கப்பட்டது.

இதை மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். நிகழ்வில், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா, துறைமுக செயல்பாட்டு முதன்மை அதிகாரி சச்சின் ஸ்ரீவத்ஸவா, மண்டல காவல் கண்காணிப்பாளா் சுந்தா் கோஷ் மற்றும் காவல் அதிகாரிகள், துறைமுக அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

வெளிநாடுகளில் இருந்து சரக்குகள் ஏற்றிவரும் கப்பல்களில் பணியாற்றும் ஊழியா்கள் வருகை, இறங்குதல் கண்காணிக்கப்பட்டு, வெளியேற்றத்துக்கான அனுமதி இங்கு தரப்படும். இதன்மூலம் கப்பல்கள் வந்து திரும்பும் நேரம் குறையும் என தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.