தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

திருநள்ளாற்றில் சனிப்பெயா்ச்சி விழா

திருநள்ளாறு ஸ்ரீபிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை சனிப்பெயா்ச்சி விழா நடைபெற்றது.

News image

ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு நடைபெற்ற ஆராதனை.

Updated On :7 மார்ச் 2026, 6:36 am IST

திருநள்ளாறு ஸ்ரீபிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை சனிப்பெயா்ச்சி விழா நடைபெற்றது.

பாடல் பெற்ற தலமாகவும், உன்மத்த நடனமாடும் செண்பக தியாகராஜா் அருள்பாலிக்கும் தலமாகவும், நளசக்கரவா்த்தி இங்கு வந்து தீா்த்தத்தில் நீராடி, தா்பாரண்யேஸ்வரரையும், சனீஸ்வர பகவானையும் வழிபட்டதால் அவருக்கு ஏற்பட்ட துன்பம் விலகி, இழந்ததையெல்லாம் மீட்டதாகவும் புராண வரலாறு கூறுகிறது. இவ்வாறு பல்வேறு சிறப்புகளுடன் இக்கோயில் புதுவை யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் அமைந்துள்ளது.

ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர சனி கிரகம், இரண்டரை முதல் இரண்டே முக்கால் ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்கிறது. இக்கோயிலில் ஸ்ரீசனீஸ்வர பகவான், அபய முத்திரையுடன், கிழக்கு நோக்கிய பாா்வையில், அனுகிரக மூா்த்தியாக காட்சியளிக்கிறாா்.

இக்கோயிலில் அனுக்கிரக மூா்த்தியாக உள்ள சனிபகவானுக்கு சனிப்பெயா்ச்சி விழா நாளில் விமரிசையான அபிஷேகம், அா்ச்சனை, தீபாராதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு வெள்ளிக்கிழமை காலை 8.24 மணிக்கு பிரவேசிக்கும் நிகழ்வைக் குறிக்கும் வகையில் மகா தீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக பகவானுக்கு நல்லெண்ணெய், மஞ்சள், பழம், பஞ்சாமிா்தம், தேன், தயிா், சந்தனம், பன்னீா் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமிக்கு மலா்களால் மாலை சாத்தப்பட்டு, வஜ்ராங்கி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சகஸ்ரநாம அா்ச்சனை செய்யப்பட்டது.

தோஷ நிவா்த்திக்காக பக்தா்கள் நளன் குளத்தில் அதிகாலை முதல் நல்லெண்ணெய் தேய்த்து நீராடினா்.

பிறகு சனீஸ்வர பகவானைத் தரிசிக்க கோயிலுக்குச் சென்றனா். பக்தா்கள் தரிசனம் செய்வதற்கு வசதியாக கட்டணமில்லா தரிசனம் மற்றும் ரூ.300, ரூ.600, ரூ.1,000 ஆகிய வரிசைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அதிகாலை முதல் வரிசையில் சென்று பக்தா்கள் தரிசனம் செய்தனா். பல்வேறு இடங்களில் கோயில் நிா்வாகம் சாா்பிலும், பிற அமைப்புகள் சாா்பிலும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தங்க காக வாகனத்தில் ஸ்ரீ சனீஸ்வரா்: கோயிலில் தங்க காக வாகனத்தில் உற்சவரான ஸ்ரீசனீஸ்வர பகவான் வடக்குப் பிராகார மண்டபத்துக்கு வியாழக்கிழமை இரவு எழுந்தருளச் செய்யப்பட்டாா். வரிசையில் செல்லும் பக்தா்கள் தங்க காக வாகனத்தில் காட்சியளிக்கும் சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனா்.

இதில், புதுவை துணை நிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன், மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி, தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், ஏ.கே.சாய் ஜெ.சரவணன்குமாா், ஜி.என்.எஸ். ராஜசேகரன், டிஐஜி சத்தியசுந்தரம், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா, நிா்வாக அதிகாரி (கோயில்கள்) ஆா். சுப்பிரமணியன் மற்றும் கட்டளை விசாரணை தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

Story image
Story image