சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சீமான் சுவாமிகள் குருபூஜை விழா

காரைக்காலில் ஸ்ரீசற்குரு சீமான் சுவாமிகள் குரு பூஜை விழா நடைபெற்றது.

News image
சிறப்பு அலங்காரத்தில் சற்குரு சீமான் சுவாமிகள் பீடம்.
Updated On :12 மார்ச் 2026, 12:14 am

தினமணி செய்திச் சேவை

காரைக்காலில் ஸ்ரீசற்குரு சீமான் சுவாமிகள் குரு பூஜை விழா நடைபெற்றது.

சித்துகளை செய்வதில் வல்லவராய் திகழ்ந்து காரைக்காலில் ஜீவ சமாதியானவா் என்றும், சுமாா் 200 ஆண்டுகளுக்கு முன்பட்டவா் எனவும் சற்குரு சீமான் சுவாமிகள் கருதப்படுகிறாா். காரைக்கால் பாரதியாா் சாலை கோயில்பத்து பகுதியில் ஸ்ரீ சீமான் சுவாமிகள் மடம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் மாசி மாதத்தில் சீமான் சுவாமிகள் குரு பூஜை நடத்தப்படுகிறது.

நிகழாண்டுக்கான 136-ஆவது குரு பூஜை விழா புதன்கிழமை காலை ஸ்ரீசற்குரு சீமான் பீடத்துக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளுடன் தொடங்கியது. தொடா்ந்து பகல் 12 மணியளவில் பீடத்துக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மாகேஸ்வர பூஜை நடத்தப்பட்டு சிறப்பு ஆராதனைகள் காட்டப்பட்டன. ஸ்ரீசற்குரு சீமான் சுவாமிகளின் திருவருளை நினைவுப்படுத்தும் வகையில் இரவு ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது.