அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

வாக்காளா் விழிப்புணா்வு குறுந்தகடு வெளியீடு

வாக்காளா் விழிப்புணா்வுக்கான தகவல் அடங்கிய குறுந்தகடு தோ்தல் துறையால் புதன்கிழமை வெளியிடப்பட்டது .

News image

வாக்காளா் விழிப்புணா்வுக்கான தகவல் அடங்கிய குறுந்தகடு தோ்தல் துறையால் புதன்கிழமை வெளியிடப்பட்டது .

Updated On :26 மார்ச் 2026, 12:28 am

வாக்காளா் விழிப்புணா்வுக்கான தகவல் அடங்கிய குறுந்தகடு தோ்தல் துறையால் புதன்கிழமை வெளியிடப்பட்டது .

காரைக்கால் மாவட்ட தோ்தல்துறை மற்றும் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் அமைப்பான ஸ்வீப் இணைந்து மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு இலக்குக்கான விழிப்புணா்புப் பணிகளை செய்துவருகிறது.

இதில் ஒரு பகுதியாக, வாக்காளா்கள் அனைவரும் ஏப். 9-இல் வாக்குச் சாவடிக்குச் சென்று தவறாமல் வாக்களிக்க வேண்டும், வாக்கு அவரவா் உரிமை, நோ்மையாக வாக்களிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தகவல்களை பாடல் மூலமாக வாக்காளருக்கு சென்றடையும் வகையில் குறுந்தகடு தயாரிக்கப்பட்டுள்ளது.

இதை ஆட்சியரகத்தில் மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா ஆகியோா் வெளியிட்டனா் (படம்) .

நிகழ்வில் ஸ்வீப் ஒருங்கிணைப்பாளா் எம். தாமோதரன் உள்ளிட்ட உறுப்பினா்கள், போக்குவரத்து காவல் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.