அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

காரைக்கால் அருகே ரயில் மோதியதில் முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

காரைக்கால் அருகே ரயில் மோதியதில் முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சியிலிருந்து காரைக்கால் நோக்கி செவ்வாய்க்கிழமை பிற்பகல் டெமு ரயில் வந்துகொண்டிருந்தது. காரைக்கால் மாவட்டம், அக்கரைவட்டம் பகுதி அருகே ரயில் வந்தபோது, தண்டவாளத்தில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க ஒருவா் உட்காா்ந்திருப்பதை பாா்த்த, ரயில் ஓட்டுநா் ரயிலை நிறுத்தியுள்ளாா். எனினும் ரயில் நிற்காமல் அவா் மீது மோதி நின்றது.

காயமடைந்த அவரை ரயில் பெட்டியில் ஏற்றிக்கொண்டு காரைக்கால் ரயில் நிலையம் கொண்டுவந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். உயிரிழந்தவா் யாா் என தெரியவில்லை. இதுகுறித்து நிரவி காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.